தேடல்...

உண்ண இறைதேடல்,
உன்னத இறைத்தேடல்.

ஊதியம்

உழைப்புக்கேற்ற
ஊதியம்
நிச்சயம்
கிடைக்கும்,
உழைத்துக்கொண்டே
இருப்பவர்களுக்கு.








கற்றபின் நிற்க

எவ்வளவு கற்றோம் என்பதை விட,
கற்றதின்படி எவ்வளவு நின்றோம் என்பதுதான் சிறப்பு.
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு.
பொதுநலனுக்காக செய்த தவறுக்கு பிராயசித்தம்.
சுயநலனுக்காக செய்த தவறுக்கு ...

கடவுள் என்பதே நம்பிக்கை.

ஒரு செயலை செய்ய,

99 % தன்னம்பிக்கையும் ,1% (கடவுள்) நம்பிக்கையும் வேண்டும்.
இல்லையெனில்,

100% தன்னம்பிக்கை வேண்டும்.




சூழ்நிலை கைதி


சூழ்நிலைக்கு வளைந்து போவது அடிமை,


சூழ்நிலையை வளைத்து போவது மேன்மை.



பொய் - மெய்

நல்ல பொய், மெய் அதனினும்

கெட்ட மெய், பொய்.


ஆசி


இவருக்கு வேண்டுமானால் கடவுளின் ஆசிர்வாதம் தேவையில்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடவுளின் ஆசிர்வாதத்தில் பாதி நிச்சயம் அவருக்கு உண்டு.
காதலர்களுக்கு அல்ல

விரும்பியதை அடைவதற்காக மட்டுமல்ல,
அதை அடைந்தபிறகு வரும் இன்னல்களையும்,
விரும்பி ஏற்பவர்களுக்கே
விரும்பியது கிடைக்கும், நிலைக்கும்.

ஊனம்

உடல் ஊனத்தை போன்றே உள்ள(ம்)

ஊனத்தை சுட்டுவதும் தவறு.


தோன்றின் புகழோடு தோன்றுக


நமக்கு எவ்வளவு பயன் என்று எண்ணாமல்,


நம்மால் எவ்வளவு பயன் என்று எண்ணி வாழ்பவர்களே,


புகழ் பெறுவர்.





வாழ்க்கை என்னும் விளையாட்டில் ,

வெற்றிபெறும் போது சந்தோஷ படவேண்டும்.

தோல்வியின் போது பாராட்ட வேண்டும்.

ஆனால்,

இங்கே விளையாட்டில் தோல்வியடைந்தாலே .............. .




இயல்பியல்
ஆண்கள், பெண்களை போற்றுவதும்,
ஆண்களை, பெண்கள் தூற்றுவதும்,
இயல்பு.

இல்லறம் நல்லறமாக
அவன் சொல்வதை மட்டும் அவளும்,
.
அவள் சொல்வதை மட்டும் அவனும்,
.
கேட்டு வாழ்ந்தால் மட்டுமே,
.
இல்லறம் நல்லறம் ஆகும்.
விடுபடு
தலை போகிற நிலை எனில் கவலைப்படு,
அதை விட ஏதாவது செய்வதே மேல்.
இல்lie
நமக்கு பதிலாக இறப்பதற்கு யாரும் இல்லை,
நம்முடன் இறப்பதற்கும் யாரும் இல்லை.

ஊதியம்

உழைப்புக்கேற்ற
ஊதியம்
நிச்சயம்
கிடைக்கும்,
உழைத்துக்கொண்டே
இருப்பவர்களுக்கு.








நிதர்சனம்
வாழ்க்கை,
ஆசை பட்ட ஒன்று கிடைத்தாலும் முடிவது அல்ல,
அது கிடைக்காமல் போனாலும் முடிவதும் அல்ல,
முடிவிலி.
சிறப்பு
சிறப்பான ஒன்றை தேடி அலைவதை விட,
கிடைத்ததை சிறந்ததாக மாற்றுவதே சிறப்பு.
மனு
செவிடன் காதில் ரகசியம் சொல்வதை போன்றது.
வாக்குறுதி
அமாவாசை இருட்டில் இல்லாத எருமை மாட்டைதேடுவதை போன்றது.
கந்தரின் மூன்றாம் விதி.
தன்னை பற்றிய எண்ணங்கள் அதிகமாகும் போது,
நல்ல எண்ணங்கள் குறைகின்றன.
தீர ஆய்வதே மெய்
உண்மை என்பதே சரியான விடை, அது ஒன்றே ஒன்று தான் இருக்கும்.
ஆனால், அச்சம் என்பது தவறான விடை, அது நிறைய இருக்கும்.
நம்பிக்கை
ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறப்பான ஒன்று கிடைக்கும் என்று நம்பு.
அதை போன்றே , ஒன்று கிடைத்தால் அதுதான் சிறப்பானது என்றும் நம்பு.
முரண்பாடு
மற்றவர் குடும்பத்திற்கு கெடுதல் செய்பவர் கெட்டவர் அல்ல , தம் குடும்பத்திற்கு கெடுதல் செய்பவர்தான் கெட்டவர்.

தம் குடும்பத்திற்கு நல்லது செய்பவர் நல்லவர் அல்ல, பிறர் குடும்பத்திற்கு நல்லது செய்பவர்தான் நல்லவர்.
முடிவெடுத்தல்
யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேள். ஆனால் முடிவெடுப்பது நீயாக இரு.
வ(லி)ழி
வாழ்கையில் முன்னேற வேண்டுமெனில் ஒன்று மற்றவர்கள் வழியில் செல் அல்லது உன் வழியில் செல்.



படைப்பின் இரகசியம்



பிறக்கும் போது குழந்தை அழும். ஆனால், மற்றவர்கள் சிரிப்பார்கள்.


இறந்தபின் மற்றவர்கள் அழுவார்கள். ,ஆனால் பிணம் சிரிப்பது போல் இருக்கும்.


பொதுவாக பிறப்பை இன்பமென்றும், இறப்பை துன்பமேன்றும் கூறுவார்கள்.


உண்மையில் இப்புவியில் வாழும் எல்லோருமே ( உங்களை தவிர) ஏன்தான் பிறந்தோமோ என்று நொந்து வாடும் பொழுது , இன்னொருத்தன் புதிதாய் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும் ஆகா, நமக்கு துணையா இன்னொருத்தனும் வந்துட்டான் என்று சிரிக்கிறார்கள். ஆனால், புதிதாய் பிறந்தவன் அதை தெரிந்து கொண்டு இந்த பூமியில என்ன என்ன கஷ்டத்த எல்லாம் அனுபவிக்க போறோமோ என்று அழுகிறான்.


.
அதை போன்று தான் ஒருவன் இறக்கும் போது , மற்றவர்கள் ஆகா, நம்மல விட்டுட்டு அவன்மட்டும் தப்பிச்சுட்டான்டா என்று அழுகிறார்கள் ,ஆனால் செத்தவனோ அப்பா இந்த பூமில கெடந்து கஷ்டபடாம இதோட நம்ம கதை முடிஞ்சது என்று சிரித்த முகத்தோடு இறக்கிறான்.


நியதி
நீ எவ்வாறோ, எல்லாமும் அவ்வாறே.
.......
நல்லவராக நடிப்பவரும் ஒரு நாள் நல்லவராவார்.
சிக்கல்.
கேட்டும் செய்ய முடியாத உதவியை போன்றே,
கேட்காமல் செய்யும் உதவியாலும் சில சிக்கல் தோன்றும்.
?
நல்லவர்களை பார்த்து தீயவர்கள் திருந்தாத பொழுது,
நல்லவர்கள் , அவர்களை பார்த்து தீயவர்களாக ஏன் மாறவேண்டும்?





ஆசை அளவாக இருந்தால் ,


வாழ்கை அழகாக இருக்கும்.

'sorry everybody, give everyone a chance to change'
எழுத்தறிவித்தவர் இறைவன் ஆவார் என்பார்கள்.
என்னை பொறுத்த வரையில் எடுத்தறிவித்தவர்இறைவன் ஆவார்.
அதாவது, இது நல்லது இது தீயது என எடுத்து அறிவிப்பவர் எவருமே இறைவன் ஆவார்.
அன்பினால் உறுவாகும் மாற்றமே நிரந்தரமானது. அச்சத்தினால் உறுவாகும் மாற்றம் தற்காலிகமானது. நல் ஆசிரியர் என்பவர் அன்பின் வழியை பின்பற்றினால் மட்டுமே இச்சமுதாயத்தில் பல நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும்.
ஆனால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதாவது , அளவுக்கு மீறிய அன்பு, அளவுக்கு மீறிய அச்சம் இவை இரண்டுமே நஞ்சிற்கு சமம். அதனால் இவை இரண்டுமே போதுமான அளவு கலந்த ஒன்றை நம் முன்னோர்கள் கண்டறிந்து உள்ளனர். அது தான் கண்டிப்பூ. அது என்ன கண்டிப்பு என்பதற்கு பதிலாக , கண்டிப்பூ என்று தவறாக உள்ளதே என்று குழம்ப வேண்டாம். சிறுவர்கள் தெரியாமல் தவறு செய்யும் போது( சிறுவர்கள் செய்யும் தவறான செயல்கள் எல்லாமே தெரியாமல் செய்வதுதான்) அதை பலர் முன்னிலையில் சுட்டி காட்டுவதை விட , அவர்களை தனியாக அழைத்து , அவர்கள் தெரியாமல் செய்த செயலின் தன்மையை பற்றியும் , அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியும் எடுத்து கூறி, அது போன்ற தவறான எண்ணங்களை ஒரு பூவை பறிப்பது போல மென்மையாக பறிக்க வேண்டும்.
மனவுறுதி
உன் முடிவில் நீ உறுதியாக இருந்தால்,
முடிவும் உறுதியாக உன்னுடயதாகத்தான் இருக்கும்.


படைப்பு
சிலருக்கு பயன்படும் புத்திசாலியாய் இருப்பதை விட,
பலருக்கு பயன்படும் ஏமாளியாய் இருப்பதே சிறப்பு.
என்ன கொடும சரவணா
தென்ன மரம், சின்ன இடத்தில உயரமா வளர்ந்து வருடம் முழுவதும் தேங்காயை கொடுக்கும். ஆனா, மாமரம் இருக்கே பெருசா, அகலமா வளர்ந்து வருசத்துக்கு ஒரே ஒரு வாட்டிதான் மாங்காய் கொடுக்கும். ஆனா நாம என்ன செய்வம் எப்பவுமே பயன்தரும் தென்ன மரத்த மறந்துட்டு , மா மரத்த தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடுவோம்.






காதல்
யார் கண்ணிலும் சிக்காமல் செய்வது அல்ல,எவ்வளவு சிக்கல் வந்தாலும் தொடர்வது.
sixyear - ஆ தொடர்வது அல்ல,sincear -ஆ தொடர்வது.
ஆசையாக தொடுவது அல்ல,ஆறுதலாக தொடுவது.
குறிக்Goal.
நமது குறி Goal மேலே தான்இருக்க வேண்டும்
அதனால் தான் அதற்கு பெயர் குறிக்Goal.
எமது உடன் பிறப்புகளை அழிக்க
எமனோடு கை கோத்தபய.

பஞ்ச் டயலாக்

நாங்கெல்லாம்
சைனைடையே ஷேர் பண்ணி சாப்பிடறவங்க.
Dress க்கே Dove soap போடரவங்க.
பாயசம் குடித்தாலே பல்ல துலக்கிரவங்க.
ரகசியத்தையே சத்தம் போட்டு சொல்லுறவங்க .

சில மொழி

புலி பசித்தாலும் புல்லை தின்னாது
புலி பசித்தாலும் Full - லா தின்னாது.
சட்டியல் (சஷ்டியில் )இருந்தால் அகைப்பையில் வரும்
சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தைபேறுகிட்டும்.
களவும் கற்று மற ( களவு அகத்தும் அற)
களவை மனதாலும் நினைக்காதே.
விடை.
தவறை செய்வது தவறு , தவறி செய்வது சரி.
உன்மெய் (உண்மை )
வாழ்கை என்ற இனிய விருந்தின் முடிவில்,
மரணம் என்ற தண்ணீரை பருகத்தான் வேண்டும்.
சந்தேகம்
நம்பிக்கை துரோகம் செய்தது கருணா மட்டுமா?
இல்லை ...?

எங்களுக்கும் மன்னர் ஜோக் எழுத தெரியுமுள்ள


முடிவு

முடிவு ஒன்றே முடிவதில்லை.
தெரிந்தாலும்,
நம்மால் ஏற்க முடிவதில்லை.
Sorrow

Sorrow is an Arrow of Lord Ema,
to Borrow our
Life.
எமன்

அனைத்து போர்களின் முடிவிலும்,
சிறு காயம் கூட இல்லாமல் தப்பி விடுகிறான்,
எமன்.
கவலை

உயிர்களை பிடிக்க எமதர்மன்!
வீசும்
பாசவலை, கவலை

நன்றி :
தாங்கள் செய்த உதவிக்கு
நன்றி.
பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள்.

க(விதை)


என் மனதிலிருந்து விழும்
இவ்விதை
உயர்ந்து செழிக்குமா?
இல்லை,
உறங்கி விழிக்குமா?

Blog Archive