'sorry everybody, give everyone a chance to change'
எழுத்தறிவித்தவர் இறைவன் ஆவார் என்பார்கள்.
என்னை பொறுத்த வரையில் எடுத்தறிவித்தவர்இறைவன் ஆவார்.
அதாவது, இது நல்லது இது தீயது என எடுத்து அறிவிப்பவர் எவருமே இறைவன் ஆவார்.
அன்பினால் உறுவாகும் மாற்றமே நிரந்தரமானது. அச்சத்தினால் உறுவாகும் மாற்றம் தற்காலிகமானது. நல் ஆசிரியர் என்பவர் அன்பின் வழியை பின்பற்றினால் மட்டுமே இச்சமுதாயத்தில் பல நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும்.
ஆனால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதாவது , அளவுக்கு மீறிய அன்பு, அளவுக்கு மீறிய அச்சம் இவை இரண்டுமே நஞ்சிற்கு சமம். அதனால் இவை இரண்டுமே போதுமான அளவு கலந்த ஒன்றை நம் முன்னோர்கள் கண்டறிந்து உள்ளனர். அது தான் கண்டிப்பூ. அது என்ன கண்டிப்பு என்பதற்கு பதிலாக , கண்டிப்பூ என்று தவறாக உள்ளதே என்று குழம்ப வேண்டாம். சிறுவர்கள் தெரியாமல் தவறு செய்யும் போது( சிறுவர்கள் செய்யும் தவறான செயல்கள் எல்லாமே தெரியாமல் செய்வதுதான்) அதை பலர் முன்னிலையில் சுட்டி காட்டுவதை விட , அவர்களை தனியாக அழைத்து , அவர்கள் தெரியாமல் செய்த செயலின் தன்மையை பற்றியும் , அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியும் எடுத்து கூறி, அது போன்ற தவறான எண்ணங்களை ஒரு பூவை பறிப்பது போல மென்மையாக பறிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Blog Archive