சூழ்நிலை கைதி


சூழ்நிலைக்கு வளைந்து போவது அடிமை,


சூழ்நிலையை வளைத்து போவது மேன்மை.பொய் - மெய்

நல்ல பொய், மெய் அதனினும்

கெட்ட மெய், பொய்.


ஆசி


இவருக்கு வேண்டுமானால் கடவுளின் ஆசிர்வாதம் தேவையில்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடவுளின் ஆசிர்வாதத்தில் பாதி நிச்சயம் அவருக்கு உண்டு.
காதலர்களுக்கு அல்ல

விரும்பியதை அடைவதற்காக மட்டுமல்ல,
அதை அடைந்தபிறகு வரும் இன்னல்களையும்,
விரும்பி ஏற்பவர்களுக்கே
விரும்பியது கிடைக்கும், நிலைக்கும்.

ஊனம்

உடல் ஊனத்தை போன்றே உள்ள(ம்)

ஊனத்தை சுட்டுவதும் தவறு.


தோன்றின் புகழோடு தோன்றுக


நமக்கு எவ்வளவு பயன் என்று எண்ணாமல்,


நம்மால் எவ்வளவு பயன் என்று எண்ணி வாழ்பவர்களே,


புகழ் பெறுவர்.
Blog Archive