முடிவெடுத்தல்
யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேள். ஆனால் முடிவெடுப்பது நீயாக இரு.
வ(லி)ழி
வாழ்கையில் முன்னேற வேண்டுமெனில் ஒன்று மற்றவர்கள் வழியில் செல் அல்லது உன் வழியில் செல்.



படைப்பின் இரகசியம்



பிறக்கும் போது குழந்தை அழும். ஆனால், மற்றவர்கள் சிரிப்பார்கள்.


இறந்தபின் மற்றவர்கள் அழுவார்கள். ,ஆனால் பிணம் சிரிப்பது போல் இருக்கும்.


பொதுவாக பிறப்பை இன்பமென்றும், இறப்பை துன்பமேன்றும் கூறுவார்கள்.


உண்மையில் இப்புவியில் வாழும் எல்லோருமே ( உங்களை தவிர) ஏன்தான் பிறந்தோமோ என்று நொந்து வாடும் பொழுது , இன்னொருத்தன் புதிதாய் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும் ஆகா, நமக்கு துணையா இன்னொருத்தனும் வந்துட்டான் என்று சிரிக்கிறார்கள். ஆனால், புதிதாய் பிறந்தவன் அதை தெரிந்து கொண்டு இந்த பூமியில என்ன என்ன கஷ்டத்த எல்லாம் அனுபவிக்க போறோமோ என்று அழுகிறான்.


.
அதை போன்று தான் ஒருவன் இறக்கும் போது , மற்றவர்கள் ஆகா, நம்மல விட்டுட்டு அவன்மட்டும் தப்பிச்சுட்டான்டா என்று அழுகிறார்கள் ,ஆனால் செத்தவனோ அப்பா இந்த பூமில கெடந்து கஷ்டபடாம இதோட நம்ம கதை முடிஞ்சது என்று சிரித்த முகத்தோடு இறக்கிறான்.


Blog Archive