மன உறுதி

முக்கிய குறிப்பு :

இக்கதையில் வரும் முனிவர் நாட்டு மக்களையும், கருந்தேள் அரசியல்வாதிகளையும் நினைவூட்டினால் அது உங்களின் கற்பனையே.


ஒரு முனிவரும், அவருடைய சீடர்களும் அதிகாலையில் ஓராற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆற்றுநீரில் ஒரு கருந்தேள் ஒன்று உயிருக்கு போராடியபடியே நீந்தி வந்துகொண்டிருந்தது. அதை பார்த்த சீடர்கள் அனைவரும் பயந்துபோய் ஒதுங்கினர்.

ஆனால் முனிவரோ அந்த தேளை காப்பாற்றும் நோக்கத்தோடு அதை கையில் ஏந்தினார். கையில் வந்த அந்ததேள் உடனே அவரை கொட்டியது, உடனே வலியால் முனிவர் கையை உதறும் பொழுது அந்த தேள் நீரில் விழுந்து மீண்டும் உயிருக்கு போராடுகிறது. இதனை கண்ட முனிவர் மீண்டும் அதனை காப்பாற்ற எண்ணி அதை கையால் எடுக்கும் பொழுது மறுபடியும் அது கையில் கொட்டிவிடுகிறது.அதை மீண்டும் அவர் ஆற்றில் விட்டுவிடுகிறார்.

இதை பார்த்த சீடர்கள் முனிவரிடம், தேள் தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
முனிவர் சிரித்துக்கொண்டே இப்புவியில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் நாம் செய்யும் உதவிதான், நாம் இப்புவியில் வாழ்வதற்காக பூமாதேவிக்கு செழுத்தும் காணிக்கை. எனவே உதவி செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன துன்பம் வந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு அதை செய்து முடிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் தேள்தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
தேளின் குணம் கொட்டுவது, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுதும் அது தன்னுடைய கொட்டும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை, அப்படியிருக்க நான் மட்டும் என் உயிருக்கு ஆபத்து என்றவுடன் உதவுதல் என்ற எனது குணத்தை மாற்றிக்கொள்வேனா என்ன என்று எதிர் கேள்வி கேட்க.
சீடர்களும் முனிவரின் மனவுறுதியை புரிந்துகொண்டு, நாங்களும் இனி மற்றவர்களுக்கு உதவுவோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஒரு இலையில் அந்த தேளை எடுத்து கறையில் விட்டனர். தேளும் துள்ளிக்குதித்து ஓடியது. அவர்கள் மனதிலிருந்த அச்சமும் ஓடியது.