Corona கொரோணா

மனித நேயம் அதிகரித்தால்தான் சுயநலம் குறையும் ...

சுயநலம் குறைந்தால்தான் கொரோணாவும் குறையும் ... அழியும் ... 

வாழ்த்துகள் ...

தை திருநாள் ...
பொங்கல் ...
சூரியனுக்கு நன்றி...
அதுவும் ஞாயிறன்றே சிறப்பூ...
அதுவும் பிரதோசம் ...
வாழ்த்துகள் ... 

kakkakottur kakkorneshwarar temple

காக்காக்கோட்டூர் 
அருள்மிகு  காக்கோர்ணேஸ்வரர் 
திருக்கோயில் 




 மனக்குரங்கு 



மனம் ஒரு குரங்கு என்பார்கள் 

ஆனால் 

என் அனுபவப்படி 

மனம் ஒரு குரங்கு அல்ல,

அதில் தோன்றும் ஆசைகள் தான் 

குரங்கு.

சரியான, தவறு

சரியான, தவறு

பிறர் 

தவறை சுட்டு,

விளங்க வை,

விளக்கத்தை கேள்,

மன்னித்து விடு,

அல்லது

மன்னிப்பு கேள்.


உன் 

தவறை சுட்டினால் ,

விளங்க வை,

விளக்கத்தை கேள்,

மன்னிப்பு கேள்,

அல்லது

மன்னித்து விடு.




அனுபவ அறிவு 

நம் அனுபவத்தால் வருவது மட்டுமல்ல,

அனுபவமுள்ளவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவதாலும் வருவது.






Tamil Blogs Traffic Ranking

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க 

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த கணவனுக்கு மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கே நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கே  நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கே   நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கே    நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
இந்த உலகத்துக்கே    நல்லது.

ஆசை

ஆசை


கவிதை எழுத ஆசை


எனக்கும் கவிதை எழுத ஆசை

ஆனால்

ஆசைதான்

துன்பத்திற்கு காரணம்

நம் ஆசைதான்

பிறர் துன்பத்திற்கு காரணம்

என்று

புத்தர் சொன்னதால்

புத்தரே சொன்னதால்

விட்டேன்

கிள்ளிவிட்டேன்

முளையிலேயே கிள்ளிவிட்டேன்

அவ்வாசையை

அதனால்

பிறருக்கு

இன்பம்

ஆனால்

ஆனால்

என்னுள் உறங்கும் கவிஞனுக்கோ

துன்பம்

மிகத்துன்பம்.
வாழ்கை வாழ் + கை உன் கையில் உள்ளதை வைத்து மகிழ்சியாக வாழ்வது உண்மையான வாழ்கை.

உவகை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனுக்கு
தானே வரன்பார்க்கும் தாய்.

தீயவர்

என்றோ தவறி செய்தவர் தீயவர் அல்ல,
இன்றும் தவறை செய்பவர்தான் தீயவர்.

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல
அப்பா ஏழையாக இருந்தால் நாமும் ஏழை,
மாமனார் ஏழையாக இருந்தால் நாம் ஏமாளி.
அப்பா ஏழையாக இருந்தால் திருமணம் வரை சிரமம்,
மாமனார் ஏழையாக இருந்தால் மரணம் வரை சிரமம்.

இருவர்







இருவர்
மனிதரில் இருவகை.
ஒருவர்,
தவறை செய்துவிட்டு திருந்துபவர்.
மற்றொருவர்,
திருந்தி பின் தவறிழைப்பவர்.




மன உறுதி

முக்கிய குறிப்பு :

இக்கதையில் வரும் முனிவர் நாட்டு மக்களையும், கருந்தேள் அரசியல்வாதிகளையும் நினைவூட்டினால் அது உங்களின் கற்பனையே.


ஒரு முனிவரும், அவருடைய சீடர்களும் அதிகாலையில் ஓராற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆற்றுநீரில் ஒரு கருந்தேள் ஒன்று உயிருக்கு போராடியபடியே நீந்தி வந்துகொண்டிருந்தது. அதை பார்த்த சீடர்கள் அனைவரும் பயந்துபோய் ஒதுங்கினர்.

ஆனால் முனிவரோ அந்த தேளை காப்பாற்றும் நோக்கத்தோடு அதை கையில் ஏந்தினார். கையில் வந்த அந்ததேள் உடனே அவரை கொட்டியது, உடனே வலியால் முனிவர் கையை உதறும் பொழுது அந்த தேள் நீரில் விழுந்து மீண்டும் உயிருக்கு போராடுகிறது. இதனை கண்ட முனிவர் மீண்டும் அதனை காப்பாற்ற எண்ணி அதை கையால் எடுக்கும் பொழுது மறுபடியும் அது கையில் கொட்டிவிடுகிறது.அதை மீண்டும் அவர் ஆற்றில் விட்டுவிடுகிறார்.

இதை பார்த்த சீடர்கள் முனிவரிடம், தேள் தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
முனிவர் சிரித்துக்கொண்டே இப்புவியில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் நாம் செய்யும் உதவிதான், நாம் இப்புவியில் வாழ்வதற்காக பூமாதேவிக்கு செழுத்தும் காணிக்கை. எனவே உதவி செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன துன்பம் வந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு அதை செய்து முடிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் தேள்தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
தேளின் குணம் கொட்டுவது, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுதும் அது தன்னுடைய கொட்டும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை, அப்படியிருக்க நான் மட்டும் என் உயிருக்கு ஆபத்து என்றவுடன் உதவுதல் என்ற எனது குணத்தை மாற்றிக்கொள்வேனா என்ன என்று எதிர் கேள்வி கேட்க.
சீடர்களும் முனிவரின் மனவுறுதியை புரிந்துகொண்டு, நாங்களும் இனி மற்றவர்களுக்கு உதவுவோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஒரு இலையில் அந்த தேளை எடுத்து கறையில் விட்டனர். தேளும் துள்ளிக்குதித்து ஓடியது. அவர்கள் மனதிலிருந்த அச்சமும் ஓடியது.

நண்பேண்டா


பிரதிபலனை எதிர்பார்த்து பழகுபவர்களுக்கு மத்தியில்,

பழகுவதையே பிறவிபயனாக எண்ணி,

தன் வாழ்கையே அர்ப்பணிப்பவன், நண்பேண்டா.

கல்விச்செல்வம்

கல்விச்செல்வம்
மற்ற செல்வங்களை சேர்ப்பதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தாமல்,
கல்வியே செல்வம், அதுதான் காலத்தால் அழியாத செல்வம் என்பதை உணர்ந்து
கற்று கற்பித்து வாழ்வில் சிறப்போம்.

தேவை

தேவை
உயிர் வாழ உணவு,
உணவு செரிக்கும் உழைப்பு,
உழைப்புக்கு ஏற்ற உறக்கம்.