கற்றபின் நிற்க

எவ்வளவு கற்றோம் என்பதை விட,
கற்றதின்படி எவ்வளவு நின்றோம் என்பதுதான் சிறப்பு.
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு.
பொதுநலனுக்காக செய்த தவறுக்கு பிராயசித்தம்.
சுயநலனுக்காக செய்த தவறுக்கு ...

கடவுள் என்பதே நம்பிக்கை.

ஒரு செயலை செய்ய,

99 % தன்னம்பிக்கையும் ,1% (கடவுள்) நம்பிக்கையும் வேண்டும்.
இல்லையெனில்,

100% தன்னம்பிக்கை வேண்டும்.




சூழ்நிலை கைதி


சூழ்நிலைக்கு வளைந்து போவது அடிமை,


சூழ்நிலையை வளைத்து போவது மேன்மை.



பொய் - மெய்

நல்ல பொய், மெய் அதனினும்

கெட்ட மெய், பொய்.


ஆசி


இவருக்கு வேண்டுமானால் கடவுளின் ஆசிர்வாதம் தேவையில்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கடவுளின் ஆசிர்வாதத்தில் பாதி நிச்சயம் அவருக்கு உண்டு.
காதலர்களுக்கு அல்ல

விரும்பியதை அடைவதற்காக மட்டுமல்ல,
அதை அடைந்தபிறகு வரும் இன்னல்களையும்,
விரும்பி ஏற்பவர்களுக்கே
விரும்பியது கிடைக்கும், நிலைக்கும்.