நிதர்சனம்
வாழ்க்கை,
ஆசை பட்ட ஒன்று கிடைத்தாலும் முடிவது அல்ல,
அது கிடைக்காமல் போனாலும் முடிவதும் அல்ல,
முடிவிலி.
சிறப்பு
சிறப்பான ஒன்றை தேடி அலைவதை விட,
கிடைத்ததை சிறந்ததாக மாற்றுவதே சிறப்பு.
மனு
செவிடன் காதில் ரகசியம் சொல்வதை போன்றது.
வாக்குறுதி
அமாவாசை இருட்டில் இல்லாத எருமை மாட்டைதேடுவதை போன்றது.
கந்தரின் மூன்றாம் விதி.
தன்னை பற்றிய எண்ணங்கள் அதிகமாகும் போது,
நல்ல எண்ணங்கள் குறைகின்றன.
தீர ஆய்வதே மெய்
உண்மை என்பதே சரியான விடை, அது ஒன்றே ஒன்று தான் இருக்கும்.
ஆனால், அச்சம் என்பது தவறான விடை, அது நிறைய இருக்கும்.
நம்பிக்கை
ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறப்பான ஒன்று கிடைக்கும் என்று நம்பு.
அதை போன்றே , ஒன்று கிடைத்தால் அதுதான் சிறப்பானது என்றும் நம்பு.
முரண்பாடு
மற்றவர் குடும்பத்திற்கு கெடுதல் செய்பவர் கெட்டவர் அல்ல , தம் குடும்பத்திற்கு கெடுதல் செய்பவர்தான் கெட்டவர்.

தம் குடும்பத்திற்கு நல்லது செய்பவர் நல்லவர் அல்ல, பிறர் குடும்பத்திற்கு நல்லது செய்பவர்தான் நல்லவர்.

Blog Archive