சரியான, தவறு

சரியான, தவறு

பிறர் 

தவறை சுட்டு,

விளங்க வை,

விளக்கத்தை கேள்,

மன்னித்து விடு,

அல்லது

மன்னிப்பு கேள்.


உன் 

தவறை சுட்டினால் ,

விளங்க வை,

விளக்கத்தை கேள்,

மன்னிப்பு கேள்,

அல்லது

மன்னித்து விடு.
அனுபவ அறிவு 

நம் அனுபவத்தால் வருவது மட்டுமல்ல,

அனுபவமுள்ளவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவதாலும் வருவது.


Tamil Blogs Traffic Ranking

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க 

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த கணவனுக்கு மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கே நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த குடும்பத்திற்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கே  நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த வம்சத்திற்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கே   நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த ஊருக்கு   மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கே    நல்லது.

கணவன், மனைவி சொல்வதை கேட்டால் 
அந்த நாட்டுக்கு  மட்டும் நல்லது .

மனைவி, கணவன் சொல்வதை கேட்டால் 
இந்த உலகத்துக்கே    நல்லது.

ஆசை

ஆசை


கவிதை எழுத ஆசை


எனக்கும் கவிதை எழுத ஆசை

ஆனால்

ஆசைதான்

துன்பத்திற்கு காரணம்

நம் ஆசைதான்

பிறர் துன்பத்திற்கு காரணம்

என்று

புத்தர் சொன்னதால்

புத்தரே சொன்னதால்

விட்டேன்

கிள்ளிவிட்டேன்

முளையிலேயே கிள்ளிவிட்டேன்

அவ்வாசையை

அதனால்

பிறருக்கு

இன்பம்

ஆனால்

ஆனால்

என்னுள் உறங்கும் கவிஞனுக்கோ

துன்பம்

மிகத்துன்பம்.
வாழ்கை வாழ் + கை உன் கையில் உள்ளதை வைத்து மகிழ்சியாக வாழ்வது உண்மையான வாழ்கை.

Blog Archive