கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல
அப்பா ஏழையாக இருந்தால் நாமும் ஏழை,
மாமனார் ஏழையாக இருந்தால் நாம் ஏமாளி.
அப்பா ஏழையாக இருந்தால் திருமணம் வரை சிரமம்,
மாமனார் ஏழையாக இருந்தால் மரணம் வரை சிரமம்.

இருவர்இருவர்
மனிதரில் இருவகை.
ஒருவர்,
தவறை செய்துவிட்டு திருந்துபவர்.
மற்றொருவர்,
திருந்தி பின் தவறிழைப்பவர்.
மன உறுதி

முக்கிய குறிப்பு :

இக்கதையில் வரும் முனிவர் நாட்டு மக்களையும், கருந்தேள் அரசியல்வாதிகளையும் நினைவூட்டினால் அது உங்களின் கற்பனையே.


ஒரு முனிவரும், அவருடைய சீடர்களும் அதிகாலையில் ஓராற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆற்றுநீரில் ஒரு கருந்தேள் ஒன்று உயிருக்கு போராடியபடியே நீந்தி வந்துகொண்டிருந்தது. அதை பார்த்த சீடர்கள் அனைவரும் பயந்துபோய் ஒதுங்கினர்.

ஆனால் முனிவரோ அந்த தேளை காப்பாற்றும் நோக்கத்தோடு அதை கையில் ஏந்தினார். கையில் வந்த அந்ததேள் உடனே அவரை கொட்டியது, உடனே வலியால் முனிவர் கையை உதறும் பொழுது அந்த தேள் நீரில் விழுந்து மீண்டும் உயிருக்கு போராடுகிறது. இதனை கண்ட முனிவர் மீண்டும் அதனை காப்பாற்ற எண்ணி அதை கையால் எடுக்கும் பொழுது மறுபடியும் அது கையில் கொட்டிவிடுகிறது.அதை மீண்டும் அவர் ஆற்றில் விட்டுவிடுகிறார்.

இதை பார்த்த சீடர்கள் முனிவரிடம், தேள் தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
முனிவர் சிரித்துக்கொண்டே இப்புவியில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் நாம் செய்யும் உதவிதான், நாம் இப்புவியில் வாழ்வதற்காக பூமாதேவிக்கு செழுத்தும் காணிக்கை. எனவே உதவி செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன துன்பம் வந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு அதை செய்து முடிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் தேள்தான் காப்பாற்றும் உங்களையே கொட்டுகிறதே அப்படி இருக்க நீங்கள் ஏன் அதை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்கும்பொழுது.
தேளின் குணம் கொட்டுவது, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுதும் அது தன்னுடைய கொட்டும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை, அப்படியிருக்க நான் மட்டும் என் உயிருக்கு ஆபத்து என்றவுடன் உதவுதல் என்ற எனது குணத்தை மாற்றிக்கொள்வேனா என்ன என்று எதிர் கேள்வி கேட்க.
சீடர்களும் முனிவரின் மனவுறுதியை புரிந்துகொண்டு, நாங்களும் இனி மற்றவர்களுக்கு உதவுவோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஒரு இலையில் அந்த தேளை எடுத்து கறையில் விட்டனர். தேளும் துள்ளிக்குதித்து ஓடியது. அவர்கள் மனதிலிருந்த அச்சமும் ஓடியது.

நண்பேண்டா


பிரதிபலனை எதிர்பார்த்து பழகுபவர்களுக்கு மத்தியில்,

பழகுவதையே பிறவிபயனாக எண்ணி,

தன் வாழ்கையே அர்ப்பணிப்பவன், நண்பேண்டா.

கல்விச்செல்வம்

கல்விச்செல்வம்
மற்ற செல்வங்களை சேர்ப்பதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தாமல்,
கல்வியே செல்வம், அதுதான் காலத்தால் அழியாத செல்வம் என்பதை உணர்ந்து
கற்று கற்பித்து வாழ்வில் சிறப்போம்.

தேவை

தேவை
உயிர் வாழ உணவு,
உணவு செரிக்கும் உழைப்பு,
உழைப்புக்கு ஏற்ற உறக்கம்.

வெற்றி - தோல்வி

வெற்றி - தோல்வி
அறிவை மையமாக வைத்து இயங்குபவர்கள்
வெற்றியையும்,
அச்சத்தை மையமாக வைத்து இயங்குபவர்கள்
தோல்வியையும்,
பரிசாக பெறுவர்.

பகைமை

எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கு எதிரிகளே இல்லை,

எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கு எல்லோருமே எதிரிகள்தான்.

சேவை


முடிந்தால் செய்வது உதவி,

முயன்று செய்வதே சேவை.

முடிவுகள்

முடிவுகள் இரண்டுவகை.
நமக்கு மட்டும் நன்மை தருவது (Good for us),
எல்லோருக்கும் நன்மை தருவது (Good for all).

*

*
* தெரிந்து தவறு செய்பவர்கள் சிலர்,
-
* தெரியாமல் தவறு செய்பவர்கள் பலர்.

பின் குறிப்பு : * - பிறருக்கு

இருவர்

இருவர்
நாம் இருவர், நமக்குள் இருவர்.
ஏமாறுபவர் ஒருவர்,
ஏமாற்றுபவர் ஒருவர்.

தருமர்

எல்லோரும் நல்லவர்தான், இரண்டு இருக்கும் போது.

எல்லோரும் சுயநலவாதிதான், ஒன்று இருக்கும் போது.

நம்பிக்கை

எல்லோருக்கும் நம்பிக்கையானவனாக இரு,
ஆனால் யாரையும் முழுமையாக நம்பாதே.

வாழ்கை


தினமும் புது புது பிரச்சனைகளை சந்தித்து ,

அவற்றை பல பிரச்சனைகளுக்கு இடையில் தீர்த்து ,

பல புதிய பிரச்சனைகளை எதிர்பார்த்து வாழ்வதுதான்,

பிரச்சனை இல்லை இல்லை வாழ்கை.

தவறு

என்றோ தவறி செய்தவர் தீயவறல்ல,
.......
இன்றும் தவறை செய்பவன்தான் தீயவன்.

மனம்


1. கிராமத்தானுக்கு ஒன்று,


2. நகரத்தாருக்கு ரெண்டோ?

(ஏ)மாற்றம்

மாற்றங்களை
நாம்
அனுமதிக்காவிடில்,
மாற்றங்கள்
நம்மை
அவமதிக்கும்.

(நிரந்) தரமானது


அன்பினால் உருவாகும் மாற்றமே நிரந்தரமானது.

அச்சத்தினால் உருவாகும் மாற்றம் நிச்சயமற்றது.


நிற்க அதற்கு தக.

கற்க- கற்க வேண்டும்.
கசடற கற்க-தீயன விலக கற்கவேண்டும்.
கற்பவை கற்க- தேவையானவற்றை கற்கவேண்டும்.
கற்றபின் கற்க-மேலும் மேலும் கற்கவேண்டும்.
நிற்க கற்க - கற்றபின் நிற்க முடிந்தவற்றை கற்கவேண்டும்.உதவியல்

உதவியை
வழங்கி
உதவியை
பெறுவதே
...

கொடுத்தல்

இருக்கும்போது கொடுப்பது கடமை.
இருப்பதில் கொடுப்பது உதவி.
இருப்பதையே கொடுப்பது தியாகம்.

வாழ்கை

வாழ்கை
இல்லாததை தேடி இருப்பதை தொலைப்பது.வேறுபாடு

மக்களுக்கும், மாக்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு,
மக்கள் - இறைதேடி இறையாதல்.
மாக்கள் - இரைதேடி இரையாதல்


ஒன்னு - (one) ஒன் (னு)

ஒன்னு - ஒன் (னு) (one)
ரெண்ட்டு - ட்டு (two)
எட்டு - எய்ட்(டு) (eight)
குறிக்கோள் - கோல் (goal)
வெற்றி - விக்டரி (victory)

உறவு

சொந்தம்
மா = ம் + ஆ = ஆ + ம் = ஆம் = மா
வழக்கை தீர விசாரித்ததில்,
நமக்கு தெரிய வருவது என்னவெனில்,
தமிழும், இந்தியும் ஒரே மரத்து கனிகள் தான் என்பதாகும்.

உறவு

அன்புள்ள சுஜாதாவிற்கு,

ஒரு வரி கதை
உலகத்தின் கடைசி மனிதன் உறங்கும் போது கதவை தட்டுவது ...... கனவு.

தூக்கம்

உறக்கம்
நச்னு, நாலு மணி நேரம்,
அசந்து, அஞ்சு மணி நேரம்,
ஆரவாரம் இல்லாம, ஆறு மணி நேரம்,
ஏன் எழுந்திரிக்கனுமான்னு? ஏழு மணி நேரம்,
எழுந்திரிக்க மனசே இல்லாமல் எட்டு மணி நேரம்,
ஒரே பிடிவாதமா , ஒன்பது மணி நேரம்,
பட்டும் படமா ,பத்து மணி நேரம்,
பயமே இல்லாமல், பதினோரு மணி நேரம்,
பயனே இல்லாமல், பன்னிரண்டு மணிநேரம்.

Blog Archive