ஆசை

ஆசை


கவிதை எழுத ஆசை


எனக்கும் கவிதை எழுத ஆசை

ஆனால்

ஆசைதான்

துன்பத்திற்கு காரணம்

நம் ஆசைதான்

பிறர் துன்பத்திற்கு காரணம்

என்று

புத்தர் சொன்னதால்

புத்தரே சொன்னதால்

விட்டேன்

கிள்ளிவிட்டேன்

முளையிலேயே கிள்ளிவிட்டேன்

அவ்வாசையை

அதனால்

பிறருக்கு

இன்பம்

ஆனால்

ஆனால்

என்னுள் உறங்கும் கவிஞனுக்கோ

துன்பம்

மிகத்துன்பம்.